போக்ஸோவில் இரண்டாவது முறையாக இளைஞர் கைது
By DIN | Published On : 22nd September 2019 04:02 AM | Last Updated : 22nd September 2019 04:02 AM | அ+அ அ- |

தீவட்டிப்பட்டி அருகே மனைவியின் தங்கையைக் கடத்தி கர்ப்பமாக்கியதாக கட்டடத் தொழிலாளியை 2-ஆவது முறையாக போக்ஸோசட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி வட்டம், தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் மணி. கட்டட தொழிலாளி. , கடந்த இரண்டு ஆண்டுக்கு முன்பு கஞ்சநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தைக் கூறி கடத்திச் சென்று திருமணம் செய்தார்.
மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்ததைத் தொடர்ந்து தீவட்டிப்பட்டி போலீஸார் அவரை போக்ஸோ முதல் தடவை கைது செய்தனர். ஜாமீனில் சிறையிலிருந்து வெளியே வந்த மணி, அதே மாணவியுடன் குடும்பம் நடத்தினார்.
இந்த நிலையில் மனைவியின் தங்கை 17 வயது சிறுமி தற்போது பிளஸ் 2 படித்து வருகிறார். அந்த சிறுமியிடம் ஆசைவார்த்தைக் கூறி அவரையும் காதலித்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தியதில் அந்தச் சிறுமி தற்போது ஐந்து மாத கர்ப்பமாக உள்ளார். இதையடுத்து, மாமனார் வீட்டுக்குச் சென்ற மணி உங்கள், இரண்டாவது மகளையும் திருமண செய்து கொள்கிறேன், தடுத்தால் உங்களைக் கொலை செய்து விடுவேன் என்று கொலை மிரட்டி விடுத்தாராம்.
பின்னர் அன்று இரவே அந்த சிறுமியுடன் தலைமறைவானார். சிறுமியை காணாமல் அவரது பெற்றோர் தீவட்டிப்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்த போலீஸார் மேட்டூரில் தங்கியிருந்த மணியை வெள்ளிக்கிழமை கைது செய்து சிறுமியை மீட்டனர். பின்னர், மணி மீது இரண்டாவது முறையாக போக்ஸோ, பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிந்து அவரைக் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட சிறுமி, மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர், சேலத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.