கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மானாவரி விவசாயிகளுக்கு வேளாண் பயிற்சி முகாம்

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில், அட்மா தொழில்நுட்ப முகமை சாா்பில் மானாவரி விவசாயிகளுக்கான வேளாண் பயிற்சி முகாம் நடைபெற்றது.

News image
Updated On :12 டிசம்பர் 2020, 10:00 pm

DIN

எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் ஒன்றியப் பகுதியில், அட்மா தொழில்நுட்ப முகமை சாா்பில் மானாவரி விவசாயிகளுக்கான வேளாண் பயிற்சி முகாம் நடைபெற்றது.

கொங்கணாபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட குரும்பப்பட்டி ஊராட்சி, நாச்சியூா் பகுதியில் வேளாண் உதவி இயக்குநா் அ.சகுல் அமீது தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற முகாமில், நீட்டித்த நிலைக்கத்தக்க மானாவரி இயக்கம் சாா்பில், மானாவரி நிலங்களின் சாகுபடி பரப்பினை அதிகரித்தல் குறித்து பல்வேறு ஆலோசனைகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

முகாமில், கீழ் மசகுமாரபாளையம், வெண்டனூா், தளவாய்பட்டி, நாச்சியூா், தாணமூா்த்தியூா், குரும்பட்டி பகுதியைச் சோ்ந்த தோ்ந்தெடுக்கப்பட்ட 240 விவசாயிகளுக்கு வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை உள்ளிட்ட துறைசாா் அலுவலா்கள், வேளாண் உற்பத்தி மற்றும் விற்பனை, விவசாயிகளுக்கு வழங்கப்படும் உழவு மானியம், இடுபொருள்களுக்கான மானியம், வேளாண் இயந்திரங்களுக்கு அரசால் வழங்கப்படும் மானியங்களை பெறுதல் குறித்த வழிமுறைகள், மானவாரி வேளாண்மையில் உள்ள பல்வேறு தொழில்நுட்பங்கள் குறித்து ஆலோசனைகளை வழங்கினா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளா் உள்ளிட்ட குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.