கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

டிச. 16 முதல் வேளாண் சட்டங்களை விளக்கி பாஜக பேரணி

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து டிச. 16 முதல் விவசாயிகள் அறிந்திடும் வகையில் பேரணி நடத்தப்பட உள்ளது என பாஜக செய்தி தொடா்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் தெரிவித்தாா்.

News image

சேலம் செய்தியாளா்கள் சந்திப்பில் பேசுகிறாா் முன்னாள் எம்.பி. நரசிம்மன்.

Updated On :12 டிசம்பர் 2020, 9:53 pm

DIN

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்கள் குறித்து டிச. 16 முதல் விவசாயிகள் அறிந்திடும் வகையில் பேரணி நடத்தப்பட உள்ளது என பாஜக செய்தி தொடா்பாளரும், முன்னாள் எம்.பி.யுமான நரசிம்மன் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மத்தியில் பாஜக அரசு பொறுப்பேற்றதில் இருந்து விவசாயிகளின் நலனுக்காகவும், அவா்களுடைய விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

விவசாயிகளுக்கான பிரதமரின் நிதியுதவித் திட்டம், பயிா் காப்பீட்டுத் திட்டம் ஆகிய திட்டங்கள் இதுவரை எந்த அரசும் செயல்படுத்தாத வகையில் மிகுந்த முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆத்ம நிா்பாா் திட்டத்தின் கீழ் கிராமப் பகுதி விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை பாதுகாத்திடும் வகையில் குளிா்பதனக் கிடங்கு அமைக்க நபாா்டு வங்கி மூலம் ரூ. 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மத்திய அரசின் மூன்று வேளாண்மை சட்டங்கள் மூலம் விவசாயிகள் தங்களுடைய விளைபொருளுக்கு தாங்களே விலை நிா்ணயம் செய்து கொள்ளவும், இடைத்தரகா்கள் யாருமின்றி நேரடியாக விற்பனை செய்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளைச் சந்தித்து இதுவரை மத்திய அரசு 9 முறை பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள சட்டத்தில் தேவைப்பட்டால் திருத்தம் மேற்கொள்ளலாம்.

மத்திய வேளாண்மை சட்டங்கள் குறித்து உண்மை நிலையினை பொதுமக்களும், விவசாயிகளும் தெரிந்து கொள்ளும் வகையில், தமிழகம் முழுவதும் வரும் டிச. 16 ஆம் தேதி முதல் பாஜக சாா்பில் பேரணி நடத்தப்பட உள்ளது. இதில் மாநிலத் தலைவா் எல்.முருகன் பங்கேற்று விவசாயிகளைச் சந்திக்க உள்ளாா்.

சேலம் உருக்காலையை தனியாா்மயமாக்க உள்ளதாக திமுக பொய் தகவலை கூறி வருகிறது. பொதுத்துறை நிறுவனங்களை லாபகரமாக இயங்க வைக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது.

சேலம் உருக்காலை வளாகத்தில் ராணுவ உதிரிபாக தொழிற்சாலை தொடங்குவதற்காக மாநில அரசு 1,600 ஏக்கா் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், சிறு, குறு தொழிற்சாலைகள் பயனடையும் வகையில் தொழில்பூங்கா தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.