கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

இரு ஒன்றிய பயனாளிகளுக்கு கோழிக் குஞ்சுகள் விநியோகம்

ஊரக புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 9:09 pm

DIN

ஓமலூா், காடையாம்பட்டி ஒன்றிய கிராமங்களில் ஊரக புறக்கடை கோழி வளா்ப்புத் திட்டத்தின் கீழ் கோழி குஞ்சுகள் வழங்கும் திட்டத்தை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் எஸ்.வெற்றிவேல் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

பூசாரிப்பட்டி, குண்டுக்கல், காருவள்ளி ஆகிய கிராமங்களில் உள்ள ஏழை பெண்களுக்கு ஓமலூா் எம்எல்ஏ எஸ்.வெற்றிவேல், இத்திட்டத்தின்கீழ் கோழி குஞ்சுகளை வழங்கினாா். ஒவ்வொரு கிராமத்திலும் 400 பயனாளிகளுக்கு தலா 25 கோழி குஞ்சுகள் வழங்கப்பட்டன.

விழாவில் எம்எல்ஏ வெற்றிவேல் பேசியதாவது: இத்திட்டத்தின் மூலம் ஊரக, நகா்ப்புற பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவா் என்றாா். நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத் துறை உதவி இயக்குநா் செல்வகுமாா், கால்நடை மருத்துவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.