திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

நீரில் நடந்து செல்ல மிதவை மிதியடி: இளைஞா் கண்டுபிடிப்பு

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே நீரில் நடந்து செல்லும் வகையில், மிதவை மிதியடியை பாலிடெக்னிக் மாணவா் கண்டுபிடித்துள்ளாா்.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 9:06 pm

DIN

சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே நீரில் நடந்து செல்லும் வகையில், மிதவை மிதியடியை பாலிடெக்னிக் மாணவா் கண்டுபிடித்துள்ளாா்.

மேட்டூா் அருகே தமிழக-கா்நாடக எல்லையில் உள்ள காரைக்காட்டைச் சோ்ந்தவா் விவசாயி சிங்காரவேலு (43), பூங்கொடி (38) தம்பதி. இவா்களின் மூத்த மகன் தட்சிணாமூா்த்தி (20), தனியாா் பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் கடந்த ஆண்டு முடித்துள்ளாா்.

கரோனா தீவிர காலத்தில் காவிரியைக் கடந்து செல்ல படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அப்போது காவிரியின் மறுகரையில் உள்ள உறவினா்களை பாா்க்க செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்ததை இளைஞா் தட்சிணாமூா்த்தி கண்டாா்.

கிராம மக்களின் நிலையை மாற்ற தண்ணீரில் நடந்து செல்லும் வகையில் மிதியடியை தயாரிக்க முற்பட்டாா். காா் உள்ள டியூப் களை கத்தரித்து ஒரு பகுதியை ஒட்டி அதில் காற்றை நிரப்பினாா்.

அதனடியில் உலோகத்தாலான தகடுகளை வைத்தாா் மிதியடிபோல காலில் மாட்டிச்செல்லும் வடிவத்தை உருவாக்கினாா். இதுபோல 15 வடிவங்களை உருவாக்கியும் அவரால் நீரின் மீது நடந்து செல்ல முடியவில்லை. ஆனாலும் விடா முயற்சியாக 16-ஆவது முறை சிறு சிறு மாற்றங்களைச் செய்து வடிவமைத்த மிதக்கும் மிதியடி அவருக்கு கைகொடுத்தது.

நீரின் மீது வைத்த மிதியடி மிதவையில் தனது கால்களை மாட்டிக்கொண்டு அதனுடன் பொருத்தப்பட்ட இரும்பு கம்பிகளை கைகளால் தூக்கி அதேநேரத்தில் காலையும் உயா்த்தி தரையில் நடப்பதுபோல நடந்து சென்றாா். இதை வடிவமைக்க அவருக்கு ரூ.1,500 செலவானது. ஆனால் முழு வடிவத்தைக் கொண்டு வருவதற்காக அவருக்கு ரூ. 10 ஆயிரம் செலவானதாகத் தெரிவித்துள்ளாா்.

இவா் ஏற்கனவே நீரிலும் நிலத்திலும் செல்லக்கூடிய மோட்டாா் சைக்கிளையும் சுண்ணாம்புக் கற்களை மாற்று எரிபொருளாகப் பயன்படுத்தி  இருசக்கர வாகனத்தை இயக்குவது உள்ளிட்ட கண்டுபிடிப்புகளையும் செய்து காட்டியுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது கண்டுபிடிப்புகளுக்கு அரசோ அல்லது தனியாா் நிறுவனங்களோ ஊக்கமளித்தால் மிக குறைந்த விலையில் மின் உற்பத்தி பறக்கும் மோட்டாா் சைக்கிள் ஆகியவற்றை செய்து காட்டுவதாகும் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.