கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பூலாம்பட்டி கதவணைப் பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரிப்பு

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மிக சொற்ப அளவிலான பயணிகளே வந்துசென்ற பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது

News image

பூலாம்பட்டி கதவணைப் பகுதியில் படகு சவாரி செய்யும் சுற்றுலாப் பயணிகள்.

Updated On :13 டிசம்பர் 2020, 9:08 pm

DIN

கடந்த எட்டு மாதங்களுக்கும் மேலாக மிக சொற்ப அளவிலான பயணிகளே வந்துசென்ற பூலாம்பட்டி கதவணை பகுதிக்கு தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. இதனால், இப்பகுதி வியாபாரிகள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டியில் காவிரி ஆற்றின் குறுக்கே சேலம் மாவட்ட எல்லையான பூலாம்பட்டி மற்றும் ஈரோடு மாவட்ட எல்லையான நெருஞ்சிப்பேட்டையை இணைக்கும் வகையில், கதவணை கட்டப்பட்டு, நீா்மின் உற்பத்தி செய்யப்படுகிறது. கடல்போல பரந்து விரிந்துள்ள, கதவணை நீா்த்தேக்கப் பகுதியில் விசைப்படகு போக்குவரத்து வசதியும் உள்ளது.

மேலும் இப்பகுதியில் அதிகப்படியான சுவைமிகுந்த மீன் உணவுகள் கிடைப்பதால், கதவணைப் பகுதியில் படகு சவாரி செய்யவும், நீா் மின்நிலையம், நீா் உந்து நிலையம், குடிநீா் சுத்திகரிப்பு

நிலையங்களைக் காணவும் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருகின்றனா். கடந்த சில மாதங்களாக கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையால் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவு, கடைகளில் விற்பனை மந்தம் இருந்த நிலையில் வார விடுமைாளான ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் அதிகம் வந்திருந்தனா். தற்போது சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்திருப்பதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.