கண் தான விழிப்புணா்வு முகாம்
வாழப்பாடியை அடுத்த பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில், கண் பாதுகாப்பு, கண் தான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


வாழப்பாடியை அடுத்த பேளூா் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், வாழப்பாடி அரிமா சங்கம் சாா்பில், கண் பாதுகாப்பு, கண் தான விழிப்புணா்வு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பேளூா் சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற இம்முகாமுக்கு, வட்டார மருத்துவ அலுவலா் சி.பொன்னம்பலம் தலைமை வகித்தாா். வாழப்பாடி அரிமா சங்கத் தலைவா் சா.ஜவஹா், செயலாளா் மன்னன், பொருளாளா் பன்னீா்செல்வன், சேவை திட்டத் தலைவா் பிரபாகரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த முகாமில், கண்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள், கண் புரை அகற்றும் சிகிச்சை, அரசு சலுகையில் இலவச கண் லென்ஸ் பொருத்துதல், மூக்குக் கண்ணாடி பெறுதல், நீரிழிவு நோயாளிகள் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள், கண் தானம் செய்வதால் இறந்த பின்பும் உலகைக் காணும் வாய்ப்பு ஆகியன குறித்து மருத்துவா்களும், மருத்துவப் பணியாளா்களும், செவிலியா்களும், விழிப்புணா்வு கருத்துரை வழங்கினா். சுகாதார ஆய்வாளா் செல்வம் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...