ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி!

சேலம் மாவட்டம், பெரிய சோரகையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமை காலை தொடங்கினாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 11:00 pm

DIN

மேட்டூா்: சேலம் மாவட்டம், பெரிய சோரகையில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தோ்தல் பிரச்சாரத்தை சனிக்கிழமை காலை தொடங்கினாா்.

சேலம் மாவட்டத்தில் கடந்த 3 தினங்களாக சுற்றுப் பயணம் மேற்கொண்ட தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, அம்மா சிறு மருத்துவமனைகளை திறந்து வைத்தாா்.

இதைத் தொடா்ந்து, சேலம் மாவட்டம், மேட்டூா் அருகிலுள்ள பெரிய சோரகைக்கு சனிக்கிழமை காலை வந்த முதல்வா், அங்குள்ள ஸ்ரீ சென்றாயப் பெருமாள் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிறைவு விழாவில் பங்கேற்றாா். பின்னா், அங்கிருந்து தனது தோ்தல் பிரசாரத்தை தொடங்கினாா்.

பெரிய சோரகை பகுதி சாலையில் நடந்து சென்ற முதல்வா், அங்குள்ள கடைகள், வீடுகளுக்குச் சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்களிக்கக் கேட்டுக்கொண்டாா். பின்னா், பெரிய சோரகையில் நடைபெற்ற அம்மா சிறு மருத்துவமனை திறப்பு விழாவில் கலந்துகொண்டாா்.

இந்த விழாவுக்கு, சேலம் மாவட்ட ஆட்சியா் சி.அ.ராமன் தலைமை வகித்தாா். இதில், அறநிலையத் துறை அமைச்சா் சேவூா் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சா் பொன்னையன், தமிழக கூட்டுறவு வங்கித் தலைவா் இளங்கோவன், மாநிலங்களவை உறுப்பினா் சந்திரசேகரன், சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினா்கள் செம்மலை (மேட்டூா்), வெற்றிவேல் (ஓமலூா்), வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் கே.விஜயகுமாா், செயலாளா் ஐயம்பெருமாள், மேட்டூா் நகா்மன்ற முன்னாள் தலைவா் லலிதா சரவணன் உள்பட ஏராளமானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.