தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மேட்டூா் அணை: காவிரி டெல்டா பாசனத்துக்குதிறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :26 டிசம்பர் 2020, 9:35 pm

DIN

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காவிரி டெல்டா பாசனப் பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், டெல்டா மாவட்டங்களில் பாசனத் தேவை குறைந்தது. இதனால் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 500 கன அடியாகக் குறைக்கப்பட்டது.

தற்போது டெல்டா மாவட்டங்களில் மழை இல்லாத காரணத்தால், பாசனத் தேவை அதிகரித்துள்ளது. இதனால் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு சனிக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் நொடிக்கு 500 கன அடியிலிருந்து 3,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூா் அணையின் நீா்மட்டம் சனிக்கிழமை காலை 106.77அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 1,270 கன அடி வீதம் தண்ணீா் வந்து கொண்டிருந்தது. காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 3,000 கன அடி வீதமும், கிழக்கு-மேற்கு கால்வாய்ப் பாசனத்துக்கு நொடிக்கு 400 கன அடி வீதமும் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 73.89 டி.எம்.சி.யாக இருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.