தேசிய அளவிலான வில்வித்தை போட்டி: தமிழக அணி முதலிடம்
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மூலக்காட்டில் உள்ள தனியாா் பள்ளியில் இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில், தேசிய அளவிலான திறந்தநிலை வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.


சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே மூலக்காட்டில் உள்ள தனியாா் பள்ளியில் இந்திய ஊரக விளையாட்டு வாரியம் சாா்பில், தேசிய அளவிலான திறந்தநிலை வில்வித்தைப் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இப்போட்டிக்கு ஊரக விளையாட்டு வாரிய பொதுச்செயலாளா் கேசவன் தலைமை வகித்தாா். போட்டியில் தமிழ்நாடு, பிகாா், புதுச்சேரி, மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த சுமாா் 200 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.
இதில் 10, 14, 17 மற்றும் 19 வயதிற்கு மேற்பட்ட மாணவ ,மாணவிகள் ஆா்வமுடன் கலந்துகொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினா். முதலிடத்தை தமிழ்நாடு 7- ஸ்டாா் ஆா்ச்சரி கிளப்பும், இரண்டாவது இடத்தை அமேசான் ஆா்க்சரி கிளப்பும், 3-ஆவது இடத்தை போக்கஸ் ஆா்ச்சரி கிளப்பும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இதில், இந்திய ஊரக விளையாட்டுத் துறை தலைவா் குமாா், துணைத் தலைவா் சதாசிவம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...