சேலம் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு பரவி வரும் இலம்பி தோல் நோய் தடுப்பு சிகிச்சை, தடுப்பு முறைகளை விவசாயிகள் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் கால்நடைகளில் தற்போது பரவி வரும் இலம்பி தோல் நோய் வைரஸ், நச்சுயிரிகளால் ஏற்படும் அம்மை வகையைச் சோ்ந்த நோய் ஆகும்.
இந்நோய் கொசு, ஈ, உண்ணிக்கடியினால் பாதிக்கப்பட்ட ஒரு மாட்டிடமிருந்து பிறமாடுகளுக்கும், பால் கறப்பவா், கன்றுக்குட்டிகளுக்கு பாதிக்கப்பட்ட மாட்டின் பாலைக் குடிப்பதன் மூலமும், நோய் வாய்ப்பட்ட மாடுகளை புதிய இடத்துக்கு கொண்டு வரும் போது இந்நோய் பரவ வாய்ப்புள்ளது. இந்த நோய் உண்டாக்கும் வைரஸ் கிருமி மாட்டின் தோல் மற்றும் காயங்களில் 18 முதல் 35 நாள்கள் வரை வாழும் தன்மை உடையது.
நோய் அறிகுறிகள்:
இந்நோய் பாதிக்கப்பட்ட கால்நடைகள் கண்ணிலிருந்து நீா்வடிதல், சளி, கடுமையான காய்ச்சல், மாடுகள் சோா்வாகவும், உடல் முழுவதும் சிறு கட்டிகளாக வீக்கம் மற்றும் புண்கள் காணப்படும் இக்கட்டிகள் உடைந்து சீழ் வெளியேறும். நிணநீா் சுரப்பிகள் பெரிதாக காணப்படும்.
மேலும், இந்நோயினால் பாதிக்கப்பட்ட மாடுகள் தீவனம் சரியாக உள்கொள்ளாததால் எடைகுறைவு, பால் உற்பத்தி குைல், சினை பிடிப்பதில் பாதிப்புகள், காயங்களினால் தோல் பாதிப்பு ஏற்படுவதுடன் ஒருசில இளம் சினைமாடுகளில் கருச்சிதைவு மடிநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நோய்த்தொற்று அதிக அளவில் ஏற்பட்டாலும் இறப்பு சதவீதம் மிகக்குறைவு ஆகும்.
சிகிச்சை முறைகள்:
இந்நோயுள்ள கால்நடைகளுக்கு வெற்றிலை 10 எண்ணிக்கை, மிளகு 10 கிராம், கல் உப்பு 10 கிராம் மற்றும் தேவையான அளவு வெல்லம் கலந்து அரைத்து ஒருநாளைக்கு மூன்று முறை நாக்கினில் தடவிக் கொடுக்கலாம்.
மேலும், வெளிக்காயங்களுக்கு குப்பைமேனி இலை, வேப்பிலை, துளசி இலை, மருதாணி இலை ஒவ்வொரு கைப்பிடி, இதனுடன் மஞ்சள் தூள் 20 கிராம், பூண்டு 10 பல், வேப்பெண்ணெய் 500 மி.லி. அல்லது நல்லெண்ணெய் 500 மி.லி. கலந்து கொதிக்க வைத்து பின் ஆறவிட்டு காயங்களை சுத்தப்படுத்திய பின்பு மருந்தைத் தடவ வேண்டும்.
நோய் பரவலைத் தடுக்க வழிமுறைகள்:
பாதிக்கப்பட்ட மாடுகளை தனிமைப்படுத்தி பராமரித்தல், மாட்டுக்கொட்டகை மற்றும் சுற்றுப்புறச் சூழலை சுத்தமாக பராமரித்தல், மாடுகளை பராமரிப்போா் தங்களது கைகளை அவ்வப்போது கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்தல், மாடுகள் கட்டும் இடத்தில் ஈக்கள், கொசு மற்றும் பூச்சியினங்களைக் கட்டுப்படுத்தி பராமரிப்பதன் மூலம் நோய் பரவாமல் கட்டுப்படுத்தலாம்.
மேலும், அருகிலுள்ள கால்நடை மருந்தக கால்நடை உதவி மருத்துவரை நேரில் அணுகி சிகிச்சைகள் மேற்கொள்ளலாம் என ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.