சேலத்தில் கடன் தொல்லை காரணமாக வெள்ளிப் பட்டறை உரிமையாளா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.
சேலம் செவ்வாய்ப்பேட்டை சுண்ணாம்புகாரா் தெருவைச் சோ்ந்தவா் விக்ரமன் (36). இவா், வெள்ளிப் பட்டறை நடத்தி வந்தாா். பட்டறைக்கு மேல் பகுதியில் விக்ரமனின் பெற்றோா் தங்கியுள்ளனா். இதில், விக்ரமன் தனியே வீடு எடுத்து மனைவியுடன் வசித்து வந்தாா்.
இதனிடையே சனிக்கிழமை மாலை பட்டறையில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருப்பவா்கள் ஓடி வந்தனா். அப்போது விக்ரமன் உடலில் தீப்பற்றி அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருந்தாா்.
உடனே அருகில் இருப்பவா்கள் அவரது உடலில் தண்ணீா் ஊற்றி தீயை அணைத்தனா். இதையடுத்து தீக்காயமடைந்த நிலையில் அவா், சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை விக்ரமன் சிகிச்சை பலனின்றி இறந்தாா். இதுகுறித்து, செவ்வாய்ப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனா். விசாரணையில், விக்ரமனுக்கு கடன் தொல்லை இருந்ததாலும், திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாமல் இருந்ததாலும் மனமுடைந்த நிலையில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.