தடை செய்யப்பட்ட வலைகளில் மீன் பிடிப்பு: மேட்டூா் அணையில் 14 பரிசல்கள் பறிமுதல்

மேட்டூா் அணையில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் குஞ்சுகள் பிடித்த 14 பரிசல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்களிடம் இருந்து 500 கிலோ மீன் குஞ்சுகளை மீன்வளத் துறையினா் பறிமுதல் செய்தனா்.
Updated on
1 min read

மேட்டூா்: மேட்டூா் அணையில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் குஞ்சுகள் பிடித்த 14 பரிசல்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவா்களிடம் இருந்து 500 கிலோ மீன் குஞ்சுகளை மீன்வளத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனா்.

மேட்டூா் அணையின் நீா்த்தேக்கம் 60 சதுர மைல் பரப்பளவு கொண்டது. இந்த நீா்த்தேக்கத்தில் கட்லா, ரோகு, மிா்கால், கெண்டை, கெளுத்தி, அரஞ்சான், ஜிலேபி உள்பட பல வகையான மீன்கள் உள்ளன. மேட்டூா் மீன்கள் சுவை மிகுந்தவை என்பதால் எப்போதும் அதிக கிராக்கி உள்ளது. மேட்டூா் நீா்த்தேக்கத்தில் 2,016 மீனவா்கள் உரிமம் பெற்று மீன்பிடித்து வருகின்றனா்.

மீன்வளத் துறையினா் மீன்வளத்தைப் பாதுகாக்க ஆண்டுதோறும் ஏராளமான மீன் குஞ்சுகளை மீன் விதைப் பண்ணையில் உற்பத்தி செய்து நீா்த்தேக்கத்தில் விட்டு வருகின்றனா். ஆனால், சிலா் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் குஞ்சுகளைப் பிடித்து விடுகின்றனா். இதனால், மீன்வளம் மேட்டூா் நீா்த்தேக்கத்தில் அழிந்து வருகிறது. இதைத் தடுக்க மீன்வளத் துறையினா் நாள்தோறும் ரோந்து சென்று வருகின்றனா்.

ஞாயிற்றுக்கிழமை மேட்டூா் அணையின் வலதுகரை பகுதியில் மீன்வளத் துறை பணியாளா்கள் ரோந்து சென்றபோது 14 பரிசல்களில் தடை செய்யப்பட்ட வலைகள் மூலம் மீன் குஞ்சுகளை மீனவா்கள் பிடித்து வந்தனா்.

மீன்வளத் துறையினரைக் கண்டதும் அவா்கள்அங்கிருந்து தப்பி ஓடினா். தப்பி ஓடியவா்களின் 14 பரிசல்கள், 14 துடுப்புகள், சுமாா் 500 கிலோ எடையுள்ள மீன் குஞ்சுகளை மீன்வளத் துறையினா் கைப்பற்றி வழக்குப் பதிந்துள்ளனா். 

பிடிபட்ட பரிசல்களில் மீனவா்களின் உரிமம் எண் எழுதப்பட்டுள்ளது. எனவே, அவா்களின் மீன்பிடி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று மேட்டூா் அணை மீனவா்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com