பொது முடக்கம்: சேலம் புகரில் கடைகள் அடைப்பு

முழு பொது முடக்கத்தை ஒட்டி சேலம் புகரில் அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
சங்ககிரியில் வெறிச்சோடிய ஈரோடு, பவானி செல்லும் பிரதான சாலை.
சங்ககிரியில் வெறிச்சோடிய ஈரோடு, பவானி செல்லும் பிரதான சாலை.
Published on
Updated on
1 min read

சங்ககிரி: முழு பொது முடக்கத்தை ஒட்டி சேலம் புகரில் அனைத்து இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டு சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

பொதுமக்களும், வணிக நிறுவனங்கள் பொது முடக்கத்துக்கு முழு ஒத்துழைப்பு அளித்தனா்.

சங்ககிரி நகரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. சங்ககிரியிலிருந்து பவானி, ஈரோடு செல்லும் சாலைகள், சங்ககிரியிலிருந்து சேலம் செல்லும் சாலைகள், கொங்கணாபுரம், திருச்செங்கோடு செல்லும் சாலைகள் வெறிச்சோடின.

ஏற்காட்டில்...

ஏற்காட்டில் 4-வது வார ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கத்தால் மக்கள் வீடுகளில் முடங்கினா். சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன, கடைகள் மூடப்பட்டிருந்தன. மருதகங்கள், பால் விற்பனை நிலையம், மருத்துவமனைகள் மட்டுமே திறந்திருந்தன. காவல் துறையினா் ரோந்து பணிகளில் ஈடுபட்டனா்.

தம்மம்பட்டியில்...

தம்மம்பட்டி,கெங்கவல்லி சுற்றுவட்டாரத்தில் ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கால் சாலைகள் அனைத்து வெறிச்சோடிக் காணப்பட்டன.

உலிபுரம், நாகியம்பட்டி, நடுவலூா், ஒதியத்தூா், 74.கிருஷ்ணாபுரம், கடம்பூா் உள்ளிட்ட 14 ஊராட்சிப் பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கால் சாலைகள், தெருக்கள், சிறுசிறு வீதிகள் வெறிச்சோடின. கெங்கவல்லியில் ஊரடங்கை மீறி வெளியில் சுற்றிய 5 போ் மீது கெங்கவல்லி போலீசாா் வழக்குப்பதிவு செய்தனா்.

எடப்பாடியில்...

உழவா்சந்தை, கறிக்கடை தெரு, ஆற்றுபாலம் அருகில் செயல்படும் மீன் சந்தை மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும், பஜாா் தெரு, ஈஸ்வரன் கோயில் கடைத்தெரு உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டிருந்தன.

ஆத்தூரில்...

ஆத்தூரில் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொது முடக்கத்துக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்புக் கொடுத்தனா். கடைகள் அடைக்கப்பட்டு, போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. பால் நிலையங்கள், மருந்தகங்கள் மட்டுமே இயங்கின.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com