பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூரில் 5 நாள் முழு பொது முடக்கம் அமல்

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் ஏத்தாப்பூர் பேரூராட்சி மற்றும் புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து 5 நாள்க
கோப்புப் படம்
கோப்புப் படம்

பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் ஏத்தாப்பூர் பேரூராட்சி மற்றும் புத்திரகவுண்டன்பாளையம் ஊராட்சி பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்கும் நோக்கில், ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து 5 நாள்களுக்கு முழு பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையத்தில் மணியம்மாள் என்ற பெண் கொலை வழக்கில், அதே பகுதியைச் சேர்ந்த மோட்டார் மெக்கானிக் சங்கர்(42). என்பவரை ஏத்தாப்பூர் காவல்துறையினர் கடந்த 18ஆம் தேதி பிடித்து விசாரணை நடத்தினர். இவரை கைது செய்து சிறையில் அடைப்பதற்காக, சளி மாதிரி எடுத்து கரோனா நோய் தொற்று பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதில் கடந்த 19ஆம் தேதி இவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இவரிடம் விசாரணை நடத்திய ஏத்தாப்பூர் காவல்துறையினரை, சுகாதாரத்துறையினர் தனிப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தினர். இந்நிலையில், சனிக்கிழமை இரவு சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து வெளியேறிய சங்கர், பேருந்தில் ஏறி பெத்தநாயக்கன்பாளையத்திலுள்ள இவரது வீட்டிற்கு சென்றுள்ளார். காவல்துறையினர் தேடி வந்துள்ளதை பார்த்ததும் வீட்டிற்குள் சென்று கதவை தாழிட்டுக்கொண்டு துாக்கு மாட்டி தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இவரை கைது செய்த காவல்துறையினர் சிகிச்சைக்காக மீண்டும் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

இதற்கிடையே, ஏத்தாப்பூர் பேரூராட்சியைச் சேர்ந்த 29 வயது பெண் ஒருவர் புத்திரகவுண்டன்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகிலுள்ள போட்டோ ஸ்டூடியோவில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு கரோனா தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதியானது. இருவரும் வெளியூர் பயணம் செய்யாத நிலையில், வெளியூரில் இருந்து வந்தவர்களிடமும் நெருங்கி தொடர்பு இருந்ததாக தெரியவில்லை. அருகருகேவுள்ள பெத்தநாயக்கன்பாளையம் மற்றும் ஏத்தாப்பூர் பேரூராட்சி பகுதியை சேர்ந்த இருவருக்கு, அடுத்தடுத்து கரோனா தொற்று உறுதியனதால், இப்பகுதியில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க இரு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளிலும், ஏத்தாப்பூர் பேரூராட்சியையொட்டியுள்ள புத்திரகவுண்டன்பாளையம் ஊாரட்சியின் கடைவீதி பகுதியிலும் ஞாயிற்றுக்கிழமை முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு முழு பொது முடக்கத்தை கடைபிடிக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனால், தினசரி சந்தை, அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டது.
 எவ்வித முன்னறிவப்புமின்றி ஞாயிற்றுக்கிழமை திடீரென பொது முழு முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதால், இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். கரோனா தொற்று சமூகப்பரவலாக மாறிவிடாமல்  தடுப்பதற்காகவே, திடீரென முழு பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு பொதுமக்களும், வணிகர்களும் முழு ஒத்துழைப்பு கொடுத்துள்ளனர். தேவைப்பட்டால் மேலும் சில நாள்களுக்கு முழு பொது முடக்கத்தை நீட்டிப்பதற்கும் வாய்ப்ப்புள்ளதென, பெத்தநாயக்கன்பாளையம் வட்டார வருவாய்த்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com