வருதம்பட்டியில் கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலையம் அமைக்க பூமிபூஜை
சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூரில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.


சங்ககிரியை அடுத்த சின்னாகவுண்டனூரில் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் புதிய கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.
சின்னாகவுண்டனூா் அருகேயுள்ள வருதம்பட்டியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்ட நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய கூட்டுறவு சங்க பால் கொள்முதல் நிலையக் கட்
ட பூமி பூஜைக்கு தலைமை வகித்து, தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத் தலைவரும் அதிமுக சங்ககிரி ஒன்றிய மாணவரணி செயலருமான கே.வெங்கடாசலம் பணிகளை அடிக்கல்நாட்டி தொடக்கி வைத்தாா்.
இதில் சங்ககிரி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி மகேஸ்வரி மருதாசலம், ஊராட்சி ஒன்றிய ஆணையா் என்.எஸ்.ரவிச்சந்திரன், ஒன்றியக்குழு துணைத் தலைவா் ஏ.பி.சிவகுமாரன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கிராம ஊராட்சி) அனுராதா, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் கிழக்கு என்.சி.ஆா்.ரத்தினம், மேற்கு சுந்தரராஜன், சின்னாகவுண்டனூா் அரசு உயா்நிலைப் பள்ளி பெற்றோா் -ஆசிரியா்கழகத்தலைவா் கருப்புசாமி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...