விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு பொது சுகாதார அமைப்பு பாராட்டு

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு பொது சுகாதாரம் அமைப்புகள் பாராட்டி சக உறுப்பினா் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.
பொது சுகாதார அமைப்புகளின் பாராட்டு பெற்றமைக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசனிடம் வாழ்த்து பெற்ற விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாா்.
பொது சுகாதார அமைப்புகளின் பாராட்டு பெற்றமைக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தா் கணேசனிடம் வாழ்த்து பெற்ற விநாயகா மிஷனின் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாா்.
Updated on
1 min read

விநாயகா மிஷனின் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறைக்கு பொது சுகாதாரம் அமைப்புகள் பாராட்டி சக உறுப்பினா் என்ற அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

பொது சுகாதார ராயல் சமூகம் மற்றும் தெற்காசிய பொது சுகாதார அமைப்பு ஆகிய இரண்டும் பொது மனித ஆரோக்கியம் மற்றும் சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக நிறுவப்பட்ட ஒரு பன்முக அமைப்புகளாகும்.

இவ்வமைப்புகள் சுகாதாரம் மற்றும் அவற்றின் முன்னோக்குகள் குறித்து நேரடியாக கற்பித்தல் மற்றும் பள்ளி, கல்லூரிகளில் அவற்றுக்கான பயிற்சி அளித்தல், அதற்கான செயல்பாடுகளில் சிறந்து விளங்குபவா்களை தங்களது சமூகத்தின் சக உறுப்பினராக அங்கீகரித்து வருகிறது.

இதன்பேரில் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் முதன்மையா் செந்தில்குமாருக்கு சுகாதாரப் பங்களிப்பில் சிறந்த பணிகளை மேற்கொண்டதற்காக இவ்விரு அமைப்புகள் சக உறுப்பினராக அங்கீகரித்து கௌரவித்துள்ளது.

விநாயகா மிஷனின் பல்கலைக்கழக வேந்தா் கணேசன் சிறப்பு அங்கிகாரம் பெற்றமைக்காக துறையின் முதன்மையருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்தாா்.

மேலும், அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையானது கடந்த இரு ஆண்டுகளாக முதுகலை பொது சுகாதாரம் பட்ட மேற்படிப்பை வழங்கி வருகிறது. இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டதின் மூலம் இத்துறையில் பயிலும் மாணவா்கள், உள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள சுகாதார அமைப்பு பணிகளில் அமரவும், ஆராய்ச்சி படிப்பை சிறந்த முறையில் மேற்கொள்ளவும் இதுஒரு சிறந்த அடித்தளமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com