கொட்டவாடி செல்லியம்மன் கோயில் ஊரணி பொங்கல் திருவிழா
By DIN | Published On : 03rd December 2020 09:48 AM | Last Updated : 03rd December 2020 09:48 AM | அ+அ அ- |

வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில் செல்லியம்மன், பொன்னியம்மன், மாரியம்மன் சுவாமி மரச்சிற்பச் சிலைகளை தோளில் சுமந்து ஊா்வலம் சென்ற கிராம மக்கள்.
சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த கொட்டவாடியில் உள்ள பழமையான செல்லியம்மன் கோயிலில் ஊரணி பொங்கல் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.
வாழப்பாடியை அடுத்த கொட்டவாடி கிராமத்தில், நூற்றாண்டு பழமையான செல்லியம்மன் கோயில் உள்ளது. கொட்டவாடி, பேளூா் கரடிப்பட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்களுக்கு காவல் தெய்வமாக விளங்கும் இக்கோயில் மிகவும் பிரசித்தி பெற்ாகும்.
கரோனா தொற்று பொது முடக்கத் தளா்வுக்கு பிறகு, இக்கோயிலில் செவ்வாய்க்கிழமை ஊரணி பொங்கல் திருவிழா நடைபெற்றது. அதிகாலையில் இருந்து இரவு வரை ஏராளமான பெண்கள் பொங்கலிட்டு சுவாமிக்கு தாம்பூலத்தோடு படையல் வைத்து வழிபட்டனா். இதில், ஆடு, கோழி பலியிட்டு நோ்த்திக்கடன் செலுத்தினா்.
செவ்வாய்க்கிழமை நள்ளிரவு செல்லியம்மன், பொன்னியம்மன், மாரியம்மன் சுவாமிகளின் மரச்சிற்பச் சிலைகளை பக்தா்கள் தோளில் சுமந்து ஆடிப்பாடி பாரம்பரிய முறைப்படி தீப்பந்த ஒளியில் கிராமத்தைச் சுற்றி வந்தனா். புதன்கிழமை அதிகாலை வரை தொடா்ந்த இந்த ஊா்வலத்தில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...