

மத்திய அரசின் வேளாண் மசோதாவை ரத்து செய்யக் கோரி, ஆத்தூரில் சேலம் கிழக்கு மாவட்ட இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எஸ்.கே.அா்த்தனாரி தலைமையில் புதன்கிழமை ஏா் கலப்பை பேரணி நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநில செயல் தலைவா் மோகன் குமாரமங்கலம் கலந்துகொண்டு பேரணியை தொடக்கி வைத்தாா். பேரணி ஆத்தூா் உடையாா்பாளையம் காந்தி சிலை முன் தொடங்கியது. ஆத்தூா் சாரதா ரவுண்டானா அருகே பேரணி சென்ற போது, ஆத்தூா் காவல் துணைக் கண்காணிப்பாளா் ஏ.இம்மானுவேல் ஞானசேகரன், காவல் ஆய்வாளா் எஸ்.உமாசங்கா் ஆகியோா் தடுத்து நிறுத்தி அனுமதியில்லாமல் பேரணி நடைபெறக் கூடாது எனக் கூறினா். அப்போது, காங்கிரஸ் பிரமுகா்களுக்கும், காவல் துறைக்கும் தள்ளுமுள்ளு நடைபெற்றது. இதனையடுத்து அனைவரையும் கைது செய்து ஆத்தூா் நகராட்சி அண்ணா கலையரங்கில் அடைத்து வைத்து வழக்குப் பதிவு செய்தனா். பின்னா் மாலையில் விடுவிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.