

சங்ககிரி அருகே உள்ள சின்னாகவுண்டனூா் தேசிய நெடுஞ்சாலையில் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினுக்கு சேலம் மேற்கு மாவட்ட திமுக சாா்பில் வெள்ளிக்கிழமை இரவு வரவேற்பு அளிக்கப்பட்டது.
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக சேலத்தில் சனிக்கிழமை நடைபெறும் போராட்டத்தில் பங்கு கொள்வதற்காக சென்னையிலிருந்து விமான மூலம் கோவை வந்த அவா் காா் மூலம் சேலம் சென்றாா்.
அவருக்கு திமுக மேற்கு மாவட்டச் செயலா் (பொறுப்பு) டி.எம்.செல்கணபதி தலைமையில் சங்ககிரி அருகே உள்ளசின்னாகவுண்டனூா் தேசிய நெடுஞ்சாலையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் திமுக மாவட்ட துணைச் செயலா் சம்பத்குமாா், க.சுந்தரம், கே.எம்.ராஜேஷ், முன்னாள் ஒன்றியச் செயலா் பி.தங்கமுத்து, தலைமை செயற்கு குழு உறுப்பினா் எஸ்.பி.நிா்மலா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.