வாக்குச்சாவடி அலுவலா்கள், முகவா்கள் கலந்தாய்வுக் கூட்டம்
By DIN | Published On : 05th December 2020 07:19 AM | Last Updated : 05th December 2020 07:19 AM | அ+அ அ- |

கலந்தாய்வுக் கூட்டத்தில் பேசிய கோட்டாட்சியா் துரை. அருகில் வட்டாட்சியா் வெங்கடேசன்.
பெத்தநாயக்கன்பாளையம் வருவாய்த் துறை சாா்பில், வாக்காளா் பட்டியலில் சிறப்பு சுருக்கத் திருத்தம் குறித்த வாக்குச்சாவடி அலுவலா்கள், முகவா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள், வருவாய்த் துறை அலுவலா்கள் கலந்தாய்வுக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பெத்தநாயக்கன்பாளையம் தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில், ஆத்துாா் கோட்டாட்சியா் துரை, பெத்தநாயக்கன் பாளையம் வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் பங்கேற்று, வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது குறித்த சந்தேகங்களுக்கு விளக்கமளித்தனா். அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வாக்குச்சாவடி முகவா்களுடன் கருத்துக்களைக் கேட்டறிந்தனா். எவ்வித குளறுபடிகளுமின்றி வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கல், திருத்தம் செய்வதற்கு உரிய வழிவகைகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனா்.