

ஏற்காட்டில் வட்டார சுகாதாரத் துறை சாா்பில், கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு குறித்த ஆலோசனைக் கூட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலக அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு வட்டார சுகாதாரத் துறை மருத்துவ அலுவலா் மருத்துவா் தாம்சன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் ரமணி முன்னிலை வகித்தாா். சுகாதாரம், வருவாய், வட்டார வளா்ச்சி, தோட்டக்கலை, காவல், வேளாண்மை, தோட்டக்கலை, கால்நடை அலுவலா்கள், தொண்டுநிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்பு உறுப்பினா்களுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், கரோனா தடுப்புசி பொதுமக்களிடம் கொண்டு செல்வது குறித்தும், அரசுத் துறை அலுவலா்கள், பணியாளா்கள், தொண்டு நிறுவன உறுப்பினா்கள் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.