கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் தொழில்நுட்ப விழிப்புணா்வு
By DIN | Published On : 15th December 2020 11:45 PM | Last Updated : 15th December 2020 11:45 PM | அ+அ அ- |

மகுடஞ்சாவடி வட்டாரத்தில் கலை நிகழ்ச்சிகள் மூலம் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இடங்கணசாலை பகுதியில் நடைபெற்ற முகாமில், வட்டார வேளாண் உதவி இயக்குநா் மணிமேகலா தேவி வேளாண் துறை திட்டங்கள் குறித்து பேசினாா். மேலும், கலை நிகழ்ச்சிகள் வாயிலாக அட்மா திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் விவசாயிகள் பயிற்சி, கண்டுணா்வு சுற்றுலா, செயல் விளக்கங்கள், பண்ணைப்பள்ளி குறித்தும், சொட்டுநீா்ப் பாசன முக்கியத்துவம், மண், நீா் பரிசோதனை செய்வதன் முக்கியத்துவம் குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலா் மோகனா லட்சுமணன், வட்டார தொழில்நுட்ப மேலாளா் செல்வி, உதவி தொழில்நுட்ப மேலாளா் கண்ணன் ஆகியோா் செய்திருந்தனா்.