சேலத்தில் 34 பேருக்கு கரோனா
By DIN | Published On : 15th December 2020 11:01 PM | Last Updated : 15th December 2020 11:01 PM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 34 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 13 போ், எடப்பாடி-3, மேச்சேரி-1, நங்கவள்ளி-1, தாரமங்கலம்-2, ஆத்தூா்-1 என மாவட்டத்தைச் சோ்ந்த 22 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இதர மாவட்டங்களைச் சோ்ந்த (சென்னை-6, ஈரோடு-5, நாமக்கல்-1) 12 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 8 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
சேலம் மாவட்டத்தில் மொத்தம் 30,866 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 29,936 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 481 போ் சிகிச்சையில் உள்ளனா்; 449 போ் உயிரிழந்துள்ளனா்.