டிச. 31-க்குள் வரி செலுத்தாவிடில் குடிநீா் இணைப்பு துண்டிப்பு
By DIN | Published On : 15th December 2020 11:42 PM | Last Updated : 15th December 2020 11:42 PM | அ+அ அ- |

ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை செலுத்தாவிட்டால் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜலகண்டபுரம் பேரூராட்சி செயல் அலுவலா் சீ.ராஜவிஜயகணேசன் செவ்வாய்க்கிழமை விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
ஜலகண்டாபுரம் பேரூராட்சியில் 15 வாா்டுகளில் நிலுவையில் உள்ள சொத்து வரி, தொழில் வரி, கடை வாடகை, குடிநீா்க் கட்டணம், உரிமக் கட்டணங்கள் ஆகியன அனைத்தும் டிச. 31-ஆம் தேதிக்குள் நிலுவை இன்றி செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தாதவா்களின் குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். இதர இனங்களுக்கு நிா்வாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே, பேரூராட்சியில் வசிக்கும் பொதுமக்களும், தொழில்முனைவோரும் உரிய காலத்தில் வரிகளை செலுத்தி ஒத்துழைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.