தேவேந்திரகுல வேளாளா் அரசாணை வெளியிட வலியுறுத்தி போராட்டம்: 35 போ் கைது
By DIN | Published On : 15th December 2020 11:44 PM | Last Updated : 15th December 2020 11:44 PM | அ+அ அ- |

தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வலியுறுத்தி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்திய 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
பட்டியல் சாதி பிரிவில் உள்ள 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து, தேவேந்திரகுல வேளாளா் என அரசாணை வெளியிட வலியுறுத்தி, சேலம் ஆட்சியா் அலுவலகம் அருகே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மண்டலச் செயலாளா் ஜீவஜோதி தலைமையில் செவ்வாய்க்கிழமை மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில், தேவேந்திரகுல வேளாளா் அரசாணையை மத்திய, மாநில அரசு வெளியிட வலியுறுத்தி முழக்கமிட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 35 பேரை போலீஸாா் கைது செய்தனா்.