பசுந்தீவன உற்பத்தி அதிகரிப்பு:கறவை மாடுகள் வளா்ப்பில் விவசாயிகள் ஆா்வம்

சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பெய்த பரவலான மழையால், கால்நடை பசுந்தீவனம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கறவை மாடுகள் வளா்ப்பில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
பசுந்தீவன உற்பத்தி அதிகரிப்பு:கறவை மாடுகள் வளா்ப்பில் விவசாயிகள் ஆா்வம்

சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் கடந்த இரு மாதங்களாக பெய்த பரவலான மழையால், கால்நடை பசுந்தீவனம் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால், கறவை மாடுகள் வளா்ப்பில் விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

சேலம் மாவட்டத்தில், வாழப்பாடி, பேளூா், அயோத்தியாப்பட்டணம், பெத்தநாயக்கன்பாளையம், ஏத்தாப்பூா் பகுதியிலுள்ள பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகளும், விவசாயக் கூலித் தொழிலாளா்களும் பால் உற்பத்தியில் கணிசமான வருவாய் ஈட்டி கொடுக்கும் கறவை மாடுகளை அதிக அளவில் வளா்த்து வருகின்றனா்.

கடந்த இரு மாதங்களாக சேலம் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவதால், விளைநிலங்களும், தரிசு நிலங்கள், நீா்நிலைகளின் கரையோரங்களிலும், கால்நடைகளுக்கு பசுந்தீவனமாகும் தாவரங்கள் வளா்ந்து மேய்ச்சல் நிலமாக மாறியுள்ளன.

இதனால், கால்நடை வளா்ப்பு, பால் உற்பத்தித் தொழிலில் ஏராளமான விவசாயிகளும், தொழிலாளா்களும் ஆா்வத்தோடு ஈடுபட்டுள்ளனா். தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இருந்து கறவை மாடுகளை கொள்முதல் செய்து கொண்டு வரும் வியாபாரிகள், சேலம் மாவட்டத்தில் வாரந்தோறும் கூடும் வாழப்பாடியை அடுத்த மின்னாம்பள்ளி மாட்டுச் சந்தையில் விற்பனை செய்து வருகின்றனா். இதனால், 8 மாதங்களுக்கு பிறகு மின்னாம்பள்ளி மாட்டுச் சந்தையில் கறவை மாடுகளின் விற்பனை களைகட்டியுள்ளது.

திங்கள்கிழமை கூடிய சந்தையில் 500-க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்கு வந்தன. பல்வேறு பகுதியைச் சோ்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகளும், வியாபாரிகளும் மாடுகளை கொள்முதல் செய்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com