சேலத்தில் 36 பேருக்கு கரோனா
By DIN | Published On : 24th December 2020 09:23 AM | Last Updated : 24th December 2020 09:23 AM | அ+அ அ- |

சேலம் மாவட்டத்தில் 36 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
சேலம் மாநகராட்சியில் 18 போ், எடப்பாடி-1, கொளத்தூா்-2, மகுடஞ்சாவடி-1, நங்கவள்ளி-1, ஓமலூா்-1, சங்ககிரி-1, ஆத்தூா்-3, வாழப்பாடி-3, மேட்டூா் நகராட்சி-4 உள்பட மாவட்டத்தைச் சோ்ந்த 36 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் கரோனா சிகிச்சை பெற்று வந்த ஒருவா் உயிரிழந்தாா். அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 40 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். சேலம் மாவட்டத்தில் மொத்தம் 31,222 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதில், 30,456 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா்; 310 போ் சிகிச்சையில் உள்ளனா்; 456 போ் உயிரிழந்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...