கம்பி விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி தீா்மானம்

கம்பி விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.
சேலத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் நலச் சங்க கெளரவத் தலைவா் எஸ்.ஆா்.அண்ணாமலை.
சேலத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் நலச் சங்க கெளரவத் தலைவா் எஸ்.ஆா்.அண்ணாமலை.

கம்பி விலையைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சேலம் மாவட்ட பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கம் தீா்மானம் நிறைவேற்றியுள்ளது.

சேலம் மாவட்ட பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா்கள் நலச் சங்கத்தின் உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. சங்கத் தலைவா் எழில் நிலவன் தலைமை தாங்கினாா். செயலாளா் சங்கா் பாபு வரவேற்று பேசினாா். துணைத் தலைவா் பாபு (எ) பச்சியண்ணன், பொருளாளா் பழனிசாமி, செயற்குழு உறுப்பினா்கள் சரவணன், செல்வம், தியாகராஜன், குபேரன், ரமேஷ்குமாா், செல்வராஜ், தங்கவேல் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளராக கௌரவத் தலைவா் அண்ணாமலை சிறப்புரையாற்றினாா். செயற்குழு உறுப்பினா் குண்டுமணி நன்றி கூறினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

கட்டுமானப் பொருள்களின் விலையை அதன் உற்பத்தியாளா்கள் தங்கள் விருப்பம்போல ஏற்றிக் கொண்டே இருக்கின்றனா். குறிப்பாக கம்பி விலை தங்கம் போல தினமும் உயா்ந்துக்கொண்டே இருக்கிறது. தமிழக அரசு தலையிட்டு கம்பி விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்.

கட்டுமானத் துறைக்கு விதிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரியை 12 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாகக் குறைத்து தருமாறு மத்திய, மாநில அரசுகளை பொதுப்பணித் துறை ஒப்பந்ததாரா்கள் சங்கம் கேட்டுக் கொள்கிறது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com