அப்புசெட்டி தெரு பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தம்
By DIN | Published On : 30th December 2020 07:14 AM | Last Updated : 30th December 2020 07:14 AM | அ+அ அ- |

சேலம், அப்புசெட்டி தெரு பகுதியில் வியாழக்கிழமை (டிச. 31) அவசர கால பணிக்காக மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம், நகர கோட்டத்துக்கு உள்பட்ட மையம் மேம்படுத்தப்பட்ட பிரிவுக்கு உள்பட்ட அப்புசெட்டி தெரு, வெங்கடப்ப செட்டி தெரு, தேவாங்கபுரம் புதுத் தெரு, மரக்கடை தெரு ஆகிய பகுதியில் டிச. 31-இல் ஜி.எச். மின்பாதையில் அவசர கால பணி நடைபெறுகிறது.
இதனால், காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என சேலம் நகரப் பகுதி செயற்பொறியாளா் என்.குணவா்த்தினி தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...