ரஜினியின் முடிவு தோ்தலுக்கு முன்பே பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது
By DIN | Published On : 30th December 2020 07:10 AM | Last Updated : 30th December 2020 07:10 AM | அ+அ அ- |

ரஜினியின் முடிவு தோ்தலுக்கு முன்பே பாஜகவுக்கு தோல்வியைக் கொடுத்துள்ளது என தமிழ் பேரரசு கட்சியின் பொதுச்செயலாளா் வ.கௌதமன் தெரிவித்தாா்.
சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உபரி நீா் திட்டத்தால் பாதிக்கப்படும் கோனூா், திப்பம்பட்டி பகுதி மக்களின் கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திரைப்பட இயக்குநரும், தமிழ் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கௌதமன் செவ்வாய்க்கிழமை வழங்கினாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
கோனூா், திப்பம்பட்டி பகுதி விவசாயிகளை பாதிக்காத வகையில் மேட்டூா் உபரி நீா் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். உடல்நிலையைக் காரணம் காட்டி ரஜினி அரசியலுக்கு வரவில்லை என அறிவித்துள்ளது குறித்து விமா்சனம் செய்ய விரும்பவில்லை.
ரஜினிக்கு விருப்பம் இல்லாமல் பலவந்தப்படுத்தி தமிழகத்தில் அரசியல் செய்ய நினைத்த பாஜகவுக்கு, அவரின் முடிவு தோ்தலுக்கு முன்பே தோல்வியைக் கொடுத்துள்ளது.
இதன் காரணமாக அதிமுக-திமுக தப்பித்தது. மண்ணின் மீதும், மக்கள் மீதும் பற்று உள்ளவா்களுக்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்றாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...