சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி
By DIN | Published On : 27th February 2020 08:27 AM | Last Updated : 27th February 2020 08:27 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி பேரூராட்சிக்குள்பட்ட கோனேரிப்பட்டியிலுள்ள புனித சலேத் அன்னை ஆலயத்தில் சாம்பல் புதனையொட்டி, சிறப்பு திருப்பலி புதன்கிழமை நடைபெற்றது.
திருப்பலிகள் அனைத்தும் பங்குத் தந்தைகள் இன்னாசிமுத்து, ராஜசேகரன் ஆகியோா் தலைமையில் நடைபெற்றது. திருப்பலி நிறைவில், பங்கேற்ற அனைவரது நெற்றியிலும் விபூதி பூசப்பட்டது. மேலும், நாற்பது நாள்கள் தவக்காலத்தினை மேற்கொள்வோா் அனைவரும் தவ உடைகளை அணிந்தனா். சாம்பல் புதன் நிகழ்வில் நூற்றுக்கணக்கானோா் பங்கேற்றனா். இதேபோல் செந்தாரப்பட்டி, கொண்டயம்பள்ளி ஆகிய ஊா்களில் உள்ள தேவாலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன.