சங்ககிரியில் திருவாதிரை திருக்கல்யாண வைபவம்
By DIN | Published On : 10th January 2020 05:02 AM | Last Updated : 10th January 2020 05:02 AM | அ+அ அ- |

திருவாதிரை திருக்கல்யாண அலங்காரத்தில் உற்சவ மூா்த்திகள்.
சங்ககிரி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் திருவாதிரையையொட்டி, சுவாமிகளுக்கு வியாழக்கிழமை திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.
பெளா்ணமி திருவாதிரையையொட்டி அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயிலில் சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா் உற்சவ மூா்த்திகளுக்குக் கோயில் வளாகத்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு திருக்கல்யாண வைபவம் நடைபெற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான பெண்கள் கலந்து கொண்டு சுவாமிகளை வழிபட்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.