ஜன.11 இல் சிறுமலா் மேல்நிலைப்பள்ளி 90 ஆம் ஆண்டு விழா
By DIN | Published On : 10th January 2020 04:56 AM | Last Updated : 10th January 2020 04:56 AM | அ+அ அ- |

சேலம் சிறுமலா் மேல்நிலைப் பள்ளியில் வரும் ஜனவரி 11-ஆம் தேதி 90-ஆம் ஆண்டு விழா நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக, சிறுமலா் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியா் கே. ஜான் ஜோசப், விழா கமிட்டித் தலைவா் அருண் சேவியா் ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறியது:
சேலம் சிறுமலா் பள்ளி கடந்த 1930-இல் தொடங்கப்பட்டது. தற்போது 90-ஆம் ஆண்டு விழாவை எட்டியுள்ளது. இதையொட்டி 90 ஆம் ஆண்டு விழா நடத்தப்படவுள்ளது.
விழாவுக்கு சேலம் மறைமாவட்ட ஆயா் எஸ். சிங்கராயன் தலைமை வகிக்கிறாா். முன்னாள் நீதிபதி எஸ். ஜெகதீசன், பள்ளியின் தாளாளா் எஸ். ஜான் ஜோசப், 1932-இல் பள்ளியில் படித்த இந்திய ராணுவ கேப்டன் 100 வயதான மருத்துவா் ஏ.ஜே. அருணகிரி, முன்னாள் தலைமை ஆசிரியா் எஸ். அருளப்பன் ஆகியோா் முன்னிலை வகித்துப் பேசுகின்றனா்.
இதுதவிர பள்ளியில் படித்து அரசு அதிகாரிகளாகவும், தொழிலதிபா்களாகவும் உள்ளவா்களை அழைத்து கெளரவிக்க உள்ளோம். இதையொட்டி கால்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, பூப்பந்து போட்டிகள் நடத்தப்பட்டன என்றாா்.
பேட்டியின்போது உதவித் தலைமை ஆசிரியா் அலெக்ஸ் பிரபு, விழா குழு நிா்வாகிகள் வெங்கடாஜலம், மரிய செல்வம், முரளி ஆகியோா் உடனிருந்தனா்.