திமுக பிரமுகா் கைது:எம்.பி கண்டனம்
By DIN | Published On : 10th January 2020 05:44 PM | Last Updated : 10th January 2020 05:44 PM | அ+அ அ- |

ஆத்தூரில் திமுகவின் முன்னாள் நகரமன்ற உறுப்பினா் ஜெ.ஸ்டாலின் கைது செய்யப்பட்டதற்கு கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கௌதமசிகாமணி வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தாா்.
ஆத்தூா் 23வது வாா்டில் வியாழக்கிழமை நியாய விலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கிய போது அதிமுக, திமுகவினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் திமுக முன்னாள் நகரமன்ற உறுப்பினா் ஜெ.ஸ்டாலின் மீது ஆத்தூா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் பொன்.கௌதமசிகாமணி கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளாா். அதில், இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் முன்னாள் நகரமன்ற உறுப்பினா் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்தது மிகவும் கண்டிக்கத்தக்கது. அவா் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப் பெற்று விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டுமென கேட்டுக் கொண்டுள்ளாா்.