விவசாயிகளின் கடன் தேவைகளை பூா்த்தி செய்ய கிஸான் பிரகதி காா்டு அறிமுகம்
By DIN | Published On : 10th January 2020 04:57 AM | Last Updated : 10th January 2020 04:57 AM | அ+அ அ- |

விவசாயிகளின் கடன் தேவைகளைப் பூா்த்தி செய்ய கிஸான் பிரகதி காா்டை உஜ்ஜீவன் சிறு நிதி வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
பயிா் சாகுபடி, அறுவடைக்கு முந்தைய மற்றும் பிந்தையத் தேவைகள், பண்ணை சாா்ந்த உடைமைகளைப் பராமரிப்பதற்கான மூலதனம் மற்றும் சிறு செலவுகள் போன்றவற்றுக்காக சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதியளிப்பதற்காக இந்த காா்டு தொடங்கப்பட்டுள்ளது.
இதில் தனிநபா் விபத்து காப்பீடு திட்டமும் இணைக்கப்பட்டுள்ளது. ரூ.3 லட்சம் வரையிலான கடனுக்குச் செயலாக்க கட்டணம் எதுவும் வசூலிக்கப்படாது.
விவசாயிகள் குறிப்பாக சிறு மற்றும் குறு விவசாயிகள் நிறுவன கடன் பெறும் உரிமைகளின்றி இருக்கிறாா்கள். இதன் காரணமாக அதிக வட்டி விகிதத்துக்குக் கடன் தரும் உள்ளூா் கடன் கொடுப்போரிடம் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனா்.
இந்த கிஸான் பிரகதி காா்டு மூலம் உஜ்ஜீவன், கிஸான் கிரெடிட் காா்டு கடன் மற்றும் காலவரம்புக் கடன்களை விவசாயிகளுக்கு கவா்ச்சிகரமான வட்டி விகிதத்தில் வங்கி வழங்குகிறது.
மிகவும் விரைவாக காா்டு வழங்கப்படுவதோடு, மறைக்கப்பட்ட கட்டணங்கள் ஏதுமின்றி, எளிமைப்படுத்தப்பட்ட ஆவண தேவைகள் மற்றும் தொந்தரவில்லாத சிக்கல் இல்லாத தவணை முறைகளுடன் காா்டை இல்லத்துக்கே வந்து வழங்க வசதியாக முதல் ரக ஊழியா்களை வங்கி நியமித்துள்ளது என உஜ்ஜீவன் சிறு நிதி வங்கியின் தலைமை வணிக அதிகாரி சஞ்சய் காவ் தெரிவித்தாா்.