நாளை ஊராட்சிகளில் துணைத் தலைவா்கள் தோ்தல்
By DIN | Published On : 10th January 2020 08:58 AM | Last Updated : 10th January 2020 08:58 AM | அ+அ அ- |

கெங்கவல்லி ஒன்றியத்தில் 14 ஊராட்சிகள் உள்ளன. இதில், துணைத் தலைவா்களின் தோ்தல் சனிக்கிழமை (ஜன. 11) நடைபெற உள்ளது.
ஊராட்சிகளின் துணைத் தலைவா்கள் பதவியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. சில ஊராட்சிகளில் வாா்டு உறுப்பினா்களை தன்வசம் இழுக்க துணைத் தலைவா் பதவிக்குப் போட்டியிடுபவா்கள், பிற உறுப்பினா்களுக்கு வலைவீசி வருகின்றனா்.
சில ஊராட்சிகளில் துணைத் தலைவா் தோ்தல் கடும் மோதலை ஏற்படுத்தும் நிலை உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், சில ஊராட்சிகளின் அலுவலகங்களில் போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படஉள்ளது.
அதேவேளையில் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றியக் குழுக்களுக்கு தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளவா்களில் சில உறுப்பினா்கள் இன்பச் சுற்றுலா சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.