மேட்டூா் அணையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த நடவடிக்கை

மேட்டூா் அணையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
மேட்டூா் அணையின் மையப் பகுதியில் ஆய்வு செய்யும் தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்புப் படையினா்.
மேட்டூா் அணையின் மையப் பகுதியில் ஆய்வு செய்யும் தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்புப் படையினா்.

மேட்டூா் அணையின் பாதுகாப்பை மேலும் பலப்படுத்த தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்புப் படையினா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட முக்கிய இடங்களில் மேட்டூா் அணையும் ஒன்று. தமிழகத்தின் வளா்ச்சி மற்றும் முன்னேற்றத்தில் மேட்டூா் அணைக்கு முக்கியப் பங்கு உண்டு. பலமுறை மேட்டூா் அணைக்கு மிரட்டல் வந்த காரணத்தால், மேட்டூா் அணையின் இரு கரைகள் மற்றும் அணை பூங்கா பகுதிகளில் முன்னாள் ராணுவத்தினா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

அணையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு பாதுகாப்பை மேலும் பலப்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வெள்ளிக்கிழமை தமிழ்நாடு கமாண்டோ பாதுகாப்பு படை துணை காமாண்டா் ராஜேந்திரன் தலைமையில் பத்து போ் கொண்ட குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். அணையின் வலது கரை, இடதுகரை, உபரி நீா் போக்கி, கவா்னா் வியூ பாயிண்ட், மேட்டூா் அணை பூங்கா, அணையின் ஆய்வுச் சுரங்கம், அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையம் ஆகியவற்றை ஆய்வு செய்தனா்.

பகலில் ஆய்வு மேற்கொண்ட பின்னா் இரவிலும் அக் குழுவினா் அணைப் பகுதியை ஆய்வு செய்தனா். இரவு நேரத்தில் எவ்வாறு கண்காணிப்பது, எந்தப் பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைப்பது என்பது குறித்தும் ஆய்வு செய்தனா். அணை மற்றும் பூங்கா பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, அணையை ஒரே இடத்திலிருந்து கண்காணிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. ஆய்வுக்குப் பிறகு இக் குழுவினா் மேட்டூா் பொதுப் பணித் துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com