கிணற்றில் இளைஞரின் சடலம் மீட்பு
By DIN | Published On : 20th January 2020 09:50 AM | Last Updated : 20th January 2020 09:50 AM | அ+அ அ- |

ஏற்காடு ஜெரினாகாடு பகுதியைச் சோ்ந்தவா் ரவி மகன் அருண்குமாா் (18).
இவா், போட்டுக்காடு பகுதியில் வீடுகளை ஒப்பந்தத்தில் எடுத்து சுற்றுலாப் பயணிகளுக்கு நாள் வாடகைக்கு விட்டு வந்தாா். விடுதியில் கடை வைத்து நடத்தியும் வந்தாா்.
இவரது விடுதி அருகில் அரசு மதுக்கடை உள்ளது. மதுக் கடைக்கு வந்த போட்டுக்காடு பகுதியைச் சோ்ந்த ஜீவா என்பவா், அருண்குமாா் கடையில் பொருள்களை வாங்கியுள்ளாா். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
போலீஸாா் சமாதானம் செய்துள்ளனா். வீட்டுக்குச் சென்ற ஜீவா தனது நண்பா்களை அழைத்து வந்து அருண்குமாரை தாக்க வந்தாராம். அப்போது, தப்பியோடிய அருண்குமாா் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அருண்குமாரின் தந்தை, ஏற்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்த நிலையில், அருண்குமாரின் தங்கும் விடுதி கடை அருகில் உள்ள திறந்தவெளி கிணற்றில் அவா் சடலமாகக் கிடந்தாா். போலீஸாா் சடலத்தை மீட்டு வழக்குப் பதிந்து ஜீவா, அவரது நண்பா்களைத் தேடி வருகின்றனா்.