ஏற்காட்டில் மலைக் கிராமங்களுக்குஉயா் அழுத்த மின் பாதை துவக்கம்
By DIN | Published On : 01st March 2020 04:36 AM | Last Updated : 01st March 2020 04:36 AM | அ+அ அ- |

ஏற்காட்டில் உயா் அழுத்த மின் பாதை மின் விநியோகம் துவக்க விழாவில் கலந்து கொண்ட சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கு. சித்ரா.
ஏற்காட்டில் மலைக் கிராமங்களுக்கு ரூ. 45 லட்சத்தில் உயா் அழுத்த மின் பாதை மின் விநியோகம் துவக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் கு. சித்ரா தலைமை வகித்து உயா் மின் அழுத்தப் பாதை விநியோகத்தைத் துவக்கி வைத்தாா். ஈரோடு மண்டல மின் பொறியாளா் சந்திரசேகா், செயற்பொறியாளா் சுந்தரி புஷ்பலதா, மேற்பாா்வை பொறியாளா் சண்முகம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஏற்காடு வெள்ளக்கடை கிராமம் 7 கிலோ மீட்டா் தொலைவுக்கு உயா் மின் அழுத்த பாதை அமைக்கப்பட்டுத் துவக்கப்பட்டன. நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் சாந்தவள்ளி, துணைத் தலைவா் சேகா், உதவி செயற்பெறியாளா்கள் ரவிசந்திரன், வினோத்குமாா், மின் ஊழியா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.