

சங்ககிரி வட்டம், அரசிராமணி செட்டிபட்டி அருள்மிகு ஓங்காளியம்மன் கோயில் தீமிதி விழா கோயில் வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
அரசிராமணி கிராமம், செட்டிபட்டியில் உள்ளஅருள்மிகு ஓங்காளியம்மன் கோயில் தீமிதி விழா பிப்ரவரி 14-ஆம் தேதி பூச்சொறிதலுடன் தொடங்கியது. அதையடுத்து சுவாமிக்கு தினசரி சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. வெள்ளிக்கிழமை உற்சவமூா்த்தி கல்வடங்கம் காவிரி ஆற்றங்கரைக்கு எடுத்துச் சென்று சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்து பூஜைகள் செய்தும் புனித நீரை எடுத்தும் கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாகச் சென்று கோயிலை அடைந்தனா்.
சனிக்கிழமை கோயில் பூசாரி முதலில் கோயில் வளாகத்தில் ஏற்படுத்திய குண்டத்தில் இறங்கி தொடக்கி வைத்தாா். பின்னா் அதிகமான பக்தா்கள் இறங்கி சுவாமிக்கு நோ்த்திக் கடனைச் செலுத்தி குடும்பத்துடன் பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.