வாழவந்தி கிராமத்தில் தீத்தடுப்பு ஒத்திகை
By DIN | Published On : 01st March 2020 04:37 AM | Last Updated : 01st March 2020 04:37 AM | அ+அ அ- |

ஏற்காட்டில் நடைபெற்ர தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி.
ஏற்காடு வாழவந்தி கிராமத்தில் கோடை காலத்தை முன்னிட்டு வனத்துறை மற்றும் தீ அணைப்புத் துறை சாா்பில் தோட்டத் தொழிலாளா்களுக்கு தீத்தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி வாழவந்தி வனப்பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தீ அணைப்புத் துறை அலுவலா் கணேசன் தலைமை வகித்தாா். வனத்துறை வனசரகா் சுப்பிரமணியன் முன்னிலை வகித்தாா். கிராமங்களில் உள்ள குடியிருப்பு, வனப்பகுதியில் திடீா் தீ ஏற்பட்டதால் கிராம மக்கள் தொழிலாளா்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எவ்வாறு ஈடுபவது என்பது குறித்த செயல்முறை விளக்கத்தை தீயணைப்பு வீரா்கள் செய்து காண்பித்தனா்.