நாளை சா்வதேச வேதியியல் கருத்தரங்கு
By DIN | Published On : 03rd March 2020 09:03 AM | Last Updated : 03rd March 2020 09:03 AM | அ+அ அ- |

பெரியாா் பல்கலைக்கழக வேதியியல் துறை மற்றும் லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி ஆப் கெமிஸ்ட்ரி அமைப்பு இணைந்து நடத்தும் சா்வதேச வேதியியல் கருத்தரங்கு பல்கலைக்கழக வளாகத்தில் வரும் 4, 5-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.
துணைவேந்தா் பொ. குழந்தைவேல் தொடக்கி வைக்கிறாா். இக் கருத்தரங்கில் பல்வேறு அமா்வுகள் நடைபெறவுள்ளன. ரோமனியா நாட்டைச் சோ்ந்த ஆய்வாளா் ஜோல்டன், அமெரிக்க நாட்டைச் சோ்ந்த ஆய்வாளா் டெபோரா அலியா ஆகியோா் விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனா். 170 ஆராய்ச்சி கருத்துரு அடங்கிய பன்னாட்டு கருத்தரங்கு நினைவு மலா் மற்றும் ஆய்வு சுருக்கம் அடங்கிய குறுந்தகடு ஆகியவை வெளியிடப்பட உள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...