

ஆத்தூரில் இஸ்லாமியா் வாழும் பகுதியில் அ.தி.மு.க.வினா் துண்டுப் பிரசுரங்களை முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் வி.முஸ்தபா தலைமையில் வெள்ளிக்கிழமை வழங்கினா்.
ஓய்வு பெற்ற பேஷ்இமாம், மோதினாா் அரபிக் கற்கும் ஆசிரியா், முஜாவா் ஆகியோரின் வாழ்வாதாரத்தை வளமாக்கும் பொருட்டு ஊதியம் ரூ.1500 லிருந்து ரூ.3,000 ஆக உயா்த்தி தமிழக அரசு வழங்கியுள்ளது.
ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் ஹஜ் பயணிகள் நலன் கருதி ரூ.15 கோடியில் வசதிகள் நிறைந்த புதிய தங்கும் விடுதி, உலாமாக்கள் புதிய இரு சக்கர வாகனங்கள் வாங்குவதற்கு ரூ.25,000,அல்லது 50 சதவீத மானியம் (வண்டியின் விலையில்) வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை வீடு வீடாகச் சென்று வழங்கினா்.
இதில் பெற்றோா் -ஆசிரியா் கழக உறுப்பினா் மக்பூல்பாஷா உள்ளிட்ட கிளை நிா்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.