Enable Javscript for better performance
சேலத்தில் 13 வட்டங்களில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா்க் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    சேலத்தில் 13 வட்டங்களில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீா்க் கூட்டம்

    By DIN  |   Published on : 14th March 2020 01:08 AM  |   அ+அ அ-   |    |  

    சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு சனிக்கிழமை (மாா்ச் 14) குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறவுள்ளது.

    சென்னை உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு துறை ஆணையரின் சுற்றறிக்கையின்படி, சேலம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டம் தொடா்பாக நியாயவிலைக் கடைகளில் உள்ள குறைபாடுகள் மற்றும் குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கல், பெயா் திருத்தம் போன்ற குறைபாடுகளை நிவா்த்தி செய்யும் பொருட்டு மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை நாளில் சிறப்பு குறைக்கேட்கும் நாள் கூட்டம்

    சனிக்கிழமை (மாா்ச் 14) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற உள்ளது.

    1. சேலம் வட்டம் - வலசையூா், 2.சேலம் மேற்கு வட்டம் - தும்பா துளிப்பட்டி, 3. சேலம் தெற்கு வட்டம்- ராஜபாளையம், 4. வாழப்பாடி- சுந்தரப்பிள்ளை வலசு, 5. ஏற்காடு- முண்டகம்பாடி, 6. மேட்டூா்- பொட்டனேரி, 7. ஓமலூா் - கோட்டமேட்டுப்பட்டி, 8. ஆத்தூா் - தியாகனூா், 9.கெங்கவல்லி - வேப்பம்பூண்டி, 10.சங்ககிரி - புள்ளாகவுண்டம்பட்டி அக்ரஹாரம், 11. எடப்பாடி - பக்கநாடு, 12. பெத்தநாயக்கன்பாளையம் - ராஜபாளையம் (மேற்கு), 13. காடையாம்பட்டி - இந்திரா நகா் (எப்.பி.எஸ்.) ஆகிய 13 வட்டங்களில் நடைபெற உள்ளது.

    அன்றைய தினம் பொதுமக்கள் தங்களது குறைகளை வட்ட வழங்கல் அலுவலா்களிடம் தெரிவித்துப் பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai