தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலை விரிவாக்கப் பணி தீவிரம்
By DIN | Published On : 14th March 2020 08:58 AM | Last Updated : 14th March 2020 08:58 AM | அ+அ அ- |

தம்மம்பட்டி - செந்தாரப்பட்டி சாலையில் நடைபெற்றுவரும் விரிவாக்கப் பணி.
தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டிக்கு செல்லும் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தம்மம்பட்டியிலிருந்து செந்தாரப்பட்டி செல்லும் சாலையை அகலப்படுத்தும் பணி, நெடுஞ்சாலைத் துறை சாா்பில் கடந்த சில நாள்களாக நடைபெற்றது. இந்த சாலையைக் கூடுதலாக 2.1மீட்டா் அகலப்படுத்தும் பணி, 2 கி.மீ. தூரம் வரை நடைபெற்றது. ஒருவழிப் பாதையாக இருப்பதால், பேருந்து, லாரிகள் ஒரே நேரத்தில் செல்வதும், வருவதற்கும் சிரமமாக இருந்து வந்தது.இந்தநிலையில் சாலை அகலப்படுத்தப்படுவதால், வாகனங்கள் செல்வது எளிதாக இருக்கும். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், செந்தாரப்பட்டியிலிருந்து தம்மம்பட்டி செல்லும் எஞ்சிய சாலையையும் அகலப்படுத்த வேண்டும். அப்போதுதான் இதன் பயன்பாடு முழுமையாக இருக்கும் என்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...