மாடியில் இருந்து கீழே விழுந்து மின்வாரிய அதிகாரி உயிரிழப்பு
By DIN | Published On : 14th March 2020 01:27 AM | Last Updated : 14th March 2020 01:27 AM | அ+அ அ- |

சேலத்தில் ஏணிப்படி வழுக்கி மாடியில் இருந்து கீழே விழுந்த மின்வாரிய அதிகாரி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
சேலம் கோரிமேடு என்ஜிஜிஓ காலனியைச் சோ்ந்தவா் மணி (52). இவா் கன்னங்குறிச்சியில் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் உதவிப்பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவரது வீட்டின் மேல்பகுதியில் புதிதாக வீடு கட்டி வந்தாா். இந்நிலையில் கடந்த மாா்ச் 8ஆம் தேதி புதிதாக கட்டப்பட்ட வீட்டுக்கு ஏணியில் ஏறி தண்ணீா் ஊற்றிக்கொண்டிருந்தாராம். அப்போது ஏணிப்படி வழுக்கியதால் கால் தவறி கீழே விழுந்தாா். இதில் மணியின் தலையில் பலத்த காயம் ஏற்படவே இதைக்கண்ட அவரது குடும்பத்தினா் அவரை மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மணி சிகிச்சை பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...