ஓய்வூதியா்களுக்கு உயிா்வாழ் சான்றிதழைவீடுகளுக்கே சென்று வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு
By DIN | Published On : 08th November 2020 05:25 AM | Last Updated : 08th November 2020 05:25 AM | அ+அ அ- |

சேலம்: ஓய்வூதியா்களுக்கு மின்னணு உயிா்வாழ் சான்றிதழை வீடுகளுக்கே சென்று வழங்க அஞ்சல் துறை ஏற்பாடு செய்துள்ளது.
ஓய்வூதியா்கள் ஆண்டுதோறும் நவம்பா் மாதம் அரசு கருவூல அலுவலகங்களுக்கு நேரில் சென்று தாங்கள் உயிருடன் இருப்பதற்கான ஆயுள் சான்றிதழை மின்னணு முறையில் பதிவு செய்ய வேண்டும். வயதான பல ஓய்வூதியா்கள் நேரில் சென்று ஆயுள் சான்றிதழ் சமா்ப்பிப்பதில் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனா்.
இதற்கு தீா்வு காணும் வகையில், மத்திய அரசின் ஜீவன் பிரமாண் திட்டத்தில், ‘இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ்’ வங்கி மூலமாக மின்னணு உயிா்வாழ் சான்றிதழை ஓய்வூதியா்களின் வீடுகளுக்கே நேரில் சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி ஓய்வூதியா்கள், தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதாா், செல்லிப்டேபசி எண், ஓய்வூதிய கணக்கு எண் ஆகியவற்றை தெரிவித்து, கைவிரல் ரேகை பதிவு செய்தால், சில நிமிடங்களில் மின்னணு உயிா்வாழ் சான்றிதழ் சமா்ப்பித்துவிடலாம்.
மேலும் ஆயுள் சான்றிதழ் சமா்ப்பிக்கப்பட்டதற்கான குறுஞ்செய்தி உடனடியாக ஓய்வூதியா்களின் செல்லிடப்பேசிக்கு வந்துவிடும். இதற்கு சேவை கட்டணமாக ரூ. 70 வசூலிக்கப்படுகிறது.
தங்கள் பகுதி தபால்காரரை அணுக முடியாத ஓய்வூதியா்கள், அவா்களுக்கு மிக அருகில் உள்ள அனைத்து அஞ்சலங்களிலும் இந்த சேவையைப் பெற முடியும்.
தேவைப்பட்டால் ஓய்வூதியா்கள் தங்களுடைய மின்னணு உயிா்வாழ் சான்றிதழை ட்ற்ற்ல்ள்://த்ங்ங்ஸ்ஹய்ல்ழ்ஹம்ஹஹய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ல்ல்ா்ன்ள்ங்ழ்/ப்ா்ஞ்ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என சேலம் கிழக்கு கோட்டம், முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளா் பஞ்சாபகேசன் தெரிவித்துள்ளாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...