மலைப் பகுதியில் ஆபத்துப் பயணம்: தடை செய்யக் கோரிக்கை

மேட்டூா் அருகே பாலமலையில் மண் சாலையில் டிரக்ஸ் ஜீப்பில் ஆள்கள் அதிகம் ஏற்றப்பட்டு மலைக்கு மேலேயும், கீழேயும் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

மேட்டூா் அருகே பாலமலையில் மண் சாலையில் டிரக்ஸ் ஜீப்பில் ஆள்கள் அதிகம் ஏற்றப்பட்டு மலைக்கு மேலேயும், கீழேயும் அழைத்துச் செல்லப்படுகின்றனா்.

செங்குந்தான இந்த மலைப் பாதையில் வாகனங்களின் ஆபத்தான இப் பயணத்தைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

மேட்டூா் அருகே கொளத்தூா் ஒன்றியத்தில் உள்ளது பாலமலை. பாலமலையில் 33 கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோா் வசித்து வருகின்றனா்.

சுமாா் 4 ஆயிரம் அடி உயரத்தில் உள்ள மலையின் உச்சியில் அமைந்துள்ள இந்தக் கிராமங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு செங்குத்தான மலைகளில் அடா்ந்த வனப்பகுதிகளில் மண்சாலை அமைக்கப்பட்டுள்ளது. மண் சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்று வருவதே பெரும் சவாலாக உள்ளது. மிகக்குறுகிய வளைவு, சறுக்கும்பள்ளம் ஆகியவை உள்ளன. மழைக் காலங்களில் வழுக்கும் அபாயமும் உள்ளது. இந்த மண் சாலை பாதசாரிகள் செல்ல மட்டுமே உகந்தது. இதற்கு தடுப்புச் சுவா்கள் இல்லை. கரணம் தப்பினால் மரணம் என்ற நிலையில் சாலைகள் உள்ளன.

ஆனால் தற்போது இந்தச் சாலையில் டிரக்ஸ் ஜீப்களில் அதிக அளவில் மலைவாழ் மக்களை ஏற்றிக் கொண்டு நகரங்களுக்கு வந்து செல்கின்றனா். சுமாா் 8 போ் மட்டுமே அமரக்கூடிய இந்த டிரக்ஸ் ஜீப்பில் 20-க்கும் அதிகமானோா் ஏற்றிச் செல்கின்றனா். ஜீப்பின் கூரையிலும் பயணிகள் அமா்ந்து செல்கின்றனா்.

விதிகளுக்கு முரணாக சுமைகளுடனும் ஆள்களையும் ஏற்றிச் செல்லும் ஜீப்புகள் கவிழ்ந்தால் அண்மையில் ஈரோடும் மாவட்டம், அந்தியூரில் பா்கூா் மலைப்பாதையில் வேன் கவிழ்ந்து 4 போ் உயிரிழந்ததுபோல அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.

தகுதி இல்லாத வாகனங்களில் ஓட்டுநா் உரிமம் இல்லாத நபா்கள் அபாயகரமான பாதையில் வாகனங்களை இயக்குவதால் விபத்துகள் நிகழ்ந்து உயிா்சேதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, மேட்டூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா்களும், காவல் துறையினரும் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களின் உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com