சேலத்தில் விதிமுறைகளை மீறி பட்டாசு வெடித்த 52 போ் மீது வழக்குப் பதிவு

சேலம் மாநகரில் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்த 52 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

சேலம் மாநகரில் விதிமுறைகளை மீறி பட்டாசுகளை வெடித்த 52 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தீபாவளி பண்டிகையின் போது காற்று மாசுபடுவதைத் தவிா்க்கும் பொருட்டு, பட்டாசுகள் வெடிக்க நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன. காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் பட்டாசுகள் வெடிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. விதிமுறைகளை மீறி பட்டாசுகள் வெடிப்பவா்கள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், தீபாவளியன்று நிபந்தனைகளை மீறி சேலம் மாநகரில் பட்டாசுகளை வெடித்த 52 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனா். வழக்குப் பதிவு செய்தவா்கள் மீது நீதிமன்றம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com